தமிழ்நாட்டில் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளின் எண்ணிக்கை தோராயமாக ஒரு லட்சத்து இருபதாயிரம் பேர். இத்தனை பேரின் மக்கள் நலப்பணிகளும் எங்குமே முறையாக ஆவணப்படுத்தப்படுவதில்லை. இதுபோக, பொதுமக்களையும் அவர்தம் மக்கள் பிரதிநிதிகளையும் இணைக்கும் ஒருங்கிணைக்கப்பட்ட தளம் என இந்தியாவிலேயே இதுவரை எதுவும் இல்லை. எனவே, மக்கள் பிரதிநிதிகளின் பணிகளை டிஜிட்டல் வடிவில் ஆவணப்படுத்த , அவர்களை பொதுமக்களுடன் இணைக்கும் பாலமாக செயல்பட, Know Your leaders என்ற பிராண்ட் பெயரில் ஸ்டார்ட்அப் நிறுவனம் தஞ்சாவூரில் துவங்கியுள்ளோம். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஆயிரக்கணக்கான உள்ளாட்சி பிரதிநிதிகளை நேரில் சென்று சந்தித்து அவர்களின் பணிகளை ஆவணப்படுத்துவதன் அவசியம்குறித்து விளக்கி, இத்திட்டத்தில் சேர்க்கவேண்டும். ஒவ்வொரு மக்கள் நலப்பிரதிநிதியின் தொடர்பு எண் உள்ளிட்ட அனைத்தும் வழங்கப்படும். மாணவர்கள் பகுதிநேரமாகவும் இதனைச் செய்யலாம்.